வி. சி. ஆறுகுட்டி
Appearance
வி. சி. ஆறுகுட்டி V. C. Arukutty | |
---|---|
பிறப்பு | கவுண்டம்பாளையம், தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | அதிமுக |
வி. சி. ஆறுகுட்டி (V. C. Arukutty) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]மீண்டும் 2016ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவராக செயற்பட்டார்.[2]
ஆறுகுட்டி தனியாக ஓர் இசைக்குழுவையும் நடத்தி வந்தார். தனது சொந்த ஊரான விளாங்குறிச்சியில் நடைபெறும் அனைத்து கோயில் திருவிழாக்களிலும் இவர் இசைநிகழ்ச்சிகள் நடத்துகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
- ↑ "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.